Saturday, 14 February 2015

இலக்கிய மாநாட்டில் பெருமை மிகு எழுத்தாளர்களுடன் நான்(yasmin)








சிவகாசியில் காளிஸ்வரி கல்லூரியில் என் தோழி கவிஞர்.திலகபாமா தமிழகம் முழுதும் 30 எழுத்தாளர்களை வரவழைத்து கல்லூரிமாணவர்களிடையே பேச வைத்தார்.இது இரு நாள் நிகழ்வு..தனியார் உளவு துறையில் பெண்களின் பங்களிப்பு ,அது தொழிலாக மாறி இருக்கும் சூழல்,எனது அனுபங்களை பேசவைத்தால் பெண்களின் மத்தியில் உத்வேகம் வரும் என்று என்னையும் அழைத்தார்.

அடடா...எழுத்தாளர்கள் திரு,பொன்னீலன்,திரு தமிழ்மகன்,கல்கி பொறுப்பாசிரியர்,திரு ஆர்.வெங்கடேஷ்,திரு.பா.வெங்கடேஷ்,திரு.எழிலரசு,திரு.கவிதைக்காரன் இளங்கோ,.மற்றும் தோழி கவிஞர்,பத்மஜா,தோழி.தோழி கவிஞர்,மதுமிதா,கவிஞர்,கிருஷ்ணப்ரியா,தோழி.கவிஞர் ஈழவாணி தோழி கவிஞர் தர்மினி,..மன்னிச்சுக்கங்க..எனக்கு தெரிந்த பெயர் இவ்வளவு தான்..இன்னும் நிறைய்ய எழுத்தாளர்..மத்தியில் நானும்..


நண்பர் செல்வம் ராமசாமி புகைபடத்தை எடுத்து அசத்திக்கொண்டே இருந்தார் .அவரும் ஒரு வகுப்பில் பேசினார்.இளங்கோவின் கவிதை வகுப்பு பிரமாதம்..கல்கி பொறுப்பாசிரியரின் பேஸ்புக்கும் ஜெர்னலிசமும் முக்கியமான வகுப்பு..நான் உளவுதுறையில் பெண்கள் பங்களிப்பு பற்றி பேசினேன்.

அற்புதமான வரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்திற்கு என்னை அழைத்த திலகபாமாவுக்கு நன்றி..

Wednesday, 11 February 2015

கல்கி தீபாவளி மலரில் வந்த (detective yasmin) யாஸ்மின் பேட்டி

கல்கி தீபாவளி மலரில்  வந்த (detective yasmin)  யாஸ்மின் பேட்டி...
என்னை பற்றி விரிவான தகவல்களூடன் ..உளவு துறை பற்றி சிறப்புடன் பிரசுரமான முக்கியமான பேட்டி கட்டுரை

தினகரன் நாளிதழில் யாஸ்மின் (detective yasmin)பேட்டி


mirror இதழில் yasmin பேட்டி


மங்கையர் மலர்- இதழில் வெளிவந்த DETECTIVE YASMIN பேட்டி

மங்கையர் மலர்- இதழில் வெளிவந்த   பேட்டிஇது..கோவை .ஆர்.பாலா அவர்கள் எடுத்த பேட்டி...பெரும்பான்மையான பெண்களிடம் ஆதரவு பெற்றது.பல்வேறு விதமான வழக்குகளை ,பெண்களிடம் உரையாடும் வாய்ப்புகளை தந்தது..இந்த பேட்டி---என்றும் உங்கள் ..DETECTIVE YAASMIN

தினமலர் நாளிதழில் யாஸ்மின் (detective isy -yasmin)

தினமலரில்  என் தோழியும் பாவையர் மலர் மாத இதழின் ஆசிரியருமான வான்மதி அவர்கள் எடுத்த பேட்டி..இது தமிழகம் முழுக்க எனக்கு(detective isy  -yasmin)வெளிச்சம் காட்டியது.. நன்றி; தினமலர் 

துப்பறியும் பெண் யாஸ்மின் (detective yasmin)



Tuesday, 10 February 2015

DETECTIVE ISY நிறுவனத்தின் விழா பற்றிய ஆங்கில இதழின் பதிவு


DETECTIVE ISY நிறுவனத்தின் 2 ஆம் ஆண்டுவிழாவுக்கான அழைப்பிதழ்

DETECTIVE ISY  நிறுவனத்தின் 2 ஆம் ஆண்டுவிழாவுக்கான அழைப்பிதழ்.இவ்விழா 6-12-2014 ல் நடந்தேறியது..இப்பதிவு ஆவணத்துக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.உங்கள் -DETECTIVE ISY -yasmin

DETECTIVE ISY நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

DETECTIVE ISY  நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவும் பத்திரிக்கையாளர்களூகான நன்றி அறிவிப்பு நிகழ்வும்...கோவையில் நடைப்பெற்றபோது எடுத்தபோட்டோ...
எழுத்தாளர் ராஜேஷ்குமார்,கவிஞர்.தமிழச்சி தங்கபாண்டியன்,வழக்கறிஞர்.சொர்ணாலதா,எழுத்தாளார் திலகபாமா..இவர்களூடன் DETECTIVE ISY  நிறுவனத்தின் இயக்குனர் யாஸ்மின்(yasmin)