சிவகாசியில் காளிஸ்வரி கல்லூரியில் என் தோழி கவிஞர்.திலகபாமா தமிழகம் முழுதும் 30 எழுத்தாளர்களை வரவழைத்து கல்லூரிமாணவர்களிடையே பேச வைத்தார்.இது இரு நாள் நிகழ்வு..தனியார் உளவு துறையில் பெண்களின் பங்களிப்பு ,அது தொழிலாக மாறி இருக்கும் சூழல்,எனது அனுபங்களை பேசவைத்தால் பெண்களின் மத்தியில் உத்வேகம் வரும் என்று என்னையும் அழைத்தார்.
அடடா...எழுத்தாளர்கள் திரு,பொன்னீலன்,திரு தமிழ்மகன்,கல்கி பொறுப்பாசிரியர்,திரு ஆர்.வெங்கடேஷ்,திரு.பா.வெங்கடேஷ்,திரு.எழிலரசு,திரு.கவிதைக்காரன் இளங்கோ,.மற்றும் தோழி கவிஞர்,பத்மஜா,தோழி.தோழி கவிஞர்,மதுமிதா,கவிஞர்,கிருஷ்ணப்ரியா,தோழி.கவிஞர் ஈழவாணி தோழி கவிஞர் தர்மினி,..மன்னிச்சுக்கங்க..எனக்கு தெரிந்த பெயர் இவ்வளவு தான்..இன்னும் நிறைய்ய எழுத்தாளர்..மத்தியில் நானும்..
நண்பர் செல்வம் ராமசாமி புகைபடத்தை எடுத்து அசத்திக்கொண்டே இருந்தார் .அவரும் ஒரு வகுப்பில் பேசினார்.இளங்கோவின் கவிதை வகுப்பு பிரமாதம்..கல்கி பொறுப்பாசிரியரின் பேஸ்புக்கும் ஜெர்னலிசமும் முக்கியமான வகுப்பு..நான் உளவுதுறையில் பெண்கள் பங்களிப்பு பற்றி பேசினேன்.
அற்புதமான வரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்திற்கு என்னை அழைத்த திலகபாமாவுக்கு நன்றி..



No comments:
Post a Comment